சமையலறை

கமலா ஆரஞ்சு தோல் தொக்கு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

ஆரஞ்சு தோல் - 2 (பழங்களிலிருந்து)

புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு

மிளகாய்த் தூள் - 4 ஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - 4 ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

வெல்லம் - சிறிய கட்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - கொஞ்சம்

எப்படிச் செய்வது?

ஆரஞ்சுத் தோலைத் துண்டு களாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த தோலுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஆரஞ்சுத் தோலைத் துண்டு களாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த தோலுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விடவும். கடுகை வறுத்து, கறிவேப்பிலையைப் போடவும். மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் போட்டுத் தீயை அணைத்து விடவும் (புசுபுசுவென வரும்).

அரைத்த ஆரஞ்சு விழுதுக் கலவையைப் போட்டுக் கலக்கவும். வெல்லத்தை உடைத்துத் தூளாகப் போட்டுக் கலக்கவும். தீயைக் குறைவாக வைத்துக் கிளறவும். கெட்டியாகச் சுருண்டு, ஒட்டாத பதமாகவும் எண்ணெய் பிரிந்து போகும்போது தீயை அணைக்கவும். ஆறியதும் தொக்கைச் சுவைக்கலாம்.

வேண்டாம் என்று தூக்கிப்போடுவதில் இந்த ருசியான ஊறுகாயைச் செய்யலாம். நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்தது.

குறிப்பு: சீதா சம்பத்

SCROLL FOR NEXT