சமையலறை

பாஸ்தா வடைகறி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பாஸ்தா - 1 கப்

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 2 டீஸ்பூன்

மைதா மாவு - 3 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தக்காளி - 2

கசகசா, சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

புதினா இலைகள் - 3 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு:

வெங்காயம் - 1

குடைமிளகாய் - கால் பாகம்

எப்படிச் செய்வது?

பாஸ்தாவைக் குழையாமல் வேகவைக்கவும். அதனுடன் சோள மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறிகள், உப்பு சேர்த்துப் பிசையவும். அதைக் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, வதங்கிக்கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து வதக்கவும். 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: ராஜகுமாரி

SCROLL FOR NEXT