சமையலறை

ஜவ்வரிசி வடாம்

மல்லிகா வெங்கடேசன்

கண்ணாடி ஜவ்வரிசி – அரை கிலோ

பச்சரிசி – 2 ஆழாக்கு

உப்பு – தேவைக்கு

பெருங்காயம் – தேவைக்கு

சீரகம் – 2 டீஸ்பூன்

ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்த ஜவ்வரிசியைப் போட்டு வேகவையுங்கள். இட்லி மாவு பதத்தில் அரைத்த பச்சரிசி மாவை ஜவ்வரிசியில் கொட்டி, கட்டி தட்டாமல் கிளறுங்கள்.

அதனுடன் உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைக் கலந்துவிடுங்கள். மிதமான தீயில் வேகவிடுங்கள். ஈர கைகளில் மாவு ஒட்டாமல் வந்தால் மாவு வெந்துவிட்டது என்று அர்த்தம். மாவை இறக்கி ஆறவிட்டுப் பின் ஈரத் துணியிலோ பிளாஸ்டிக் பேப்பரிலோ பிழிந்து வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுங்கள்.

SCROLL FOR NEXT