கண்ணாடி ஜவ்வரிசி – 1 கப்
கேழ்வரகு மாவு
– ஒரு ஆழாக்கு
உப்பு, பெருங்காயம்
– தேவைக்கு ஏற்ப
சீரகம் – 1 டீஸ்பூன்
ஜவ்வரிசியை நான்கு மணிநேரம் நன்றாக ஊறவையுங்கள். அடி கனமாக உள்ள பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறிய ஜவ்வரிசியைப் போட்டுக் குழைய வேகவிடுங்கள். ஜவ்வரிசி குழைய வெந்தவுடன் கேழ்வரகு மாவைத் தேசை மாவு பதத்தில் கரைத்து உப்பு, சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே ஜவ்வரிசியில் ஊற்றிக் கிளறுங்கள். அனைத்தும் நன்றாகக் கலந்து கூழ் பதத்தில் வந்தவுடன் இறக்கி ஆறவிடுங்கள். ஓரளவு ஆறியதும் ஈர வேட்டியிலோ பிளாஸ்டிக் பேப்பரிலோ விரும்பிய வடிவத்தில் ஊற்றி, நன்றாகக் காய்ந்ததும் எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டுவையுங்கள்.