என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - 1 கப்
புளித்த மோர் - 2 கப்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் மோருடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பச்சரிசி மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். இறக்கிவைத்து, ஆற விடவும். ஆறிய மாவில் இருந்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, விரல் நீளத்துக்கு உருட்டவும். இரு முனைகளையும் இணைத்து, சூடான எண்ணெயில் போடவும். மிதமான தீயில் சிவக்கப் பொரித்தெடுக்கவும். மாலை நேர நொறுக்குத் தீனியாகச் சுவைக்கலாம். புளித்த மோர் சேர்த்திருப்பதால், இந்த முறுக்கு சிவப்பாகத்தான் இருக்கும்.
குறிப்பு- லட்சுமி சீனிவாசன்