சமையலறை

தலைவாழை: கும்பகோணம் கொஸ்து

கல்யாணசுந்தரம்

பாசிப் பருப்பு - 1 கப்

பச்சைப் பயறு - 2 ஸ்பூன்

நிலக்கடலை - 2 ஸ்பூன்

கொள்ளு - 2 ஸ்பூன்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

பச்சை கத்தரிக்காய் - 2

காய்ந்த மிளகாய் - 2

கடுகு - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு

பயறு வகைகளை முதல்நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை வேகவைத்து அவற்றுடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் தணலைக் குறைத்து ஐந்து நிமிடம் வேகவையுங்கள். ஒரு டீஸ்பூன் நெய்யை வாணலியில் போட்டு அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT