என்னென்ன தேவை
மஞ்சள் பூசணி - அரை கில
சர்க்கரை - பூசணி விழுதைப் போல் இரண்டு பங்கு
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நெய் - 1 கப
எப்படிச் செய்வது?
பூசணியைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடுங்கள். ஆறியபின் விழுதாக்கி, அளந்துகொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் அதைப் போட்டு அத்துடன் இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, அடிபிடிக்காமல் மிதமான சூட்டில் வைத்துக் கிளறுங்கள். நீர் வற்றும்வரை அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது கெட்டியானதும் நெய் சேர்த்துக் கிளறி ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.