சிவப்பு அவல் - 200 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 25 கிராம்
மிளகாய் வற்றல் - 4
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அவலைச் சேர்த்துப் பொரித்துக்கொள்ளுங்கள். பின் அதே எண்ணெய்யில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் இவற்றைத் தனித்தனியே வறுத்தெடுங்கள். பின் அதே வாணலியில் கடுகு தாளித்து அதனுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இதைப் பொரித்த அவல் கலவையுடன் சேர்த்துக் கிளறுங்கள்.