சமையலறை

பல்சுவை பால் உணவு: மில்க் ஷேக்

செய்திப்பிரிவு

மேங்கோ மில்க் ஷேக்

பால் ஸ்பெஷலில் மில்க் ஷேக் இல்லாமலா? சூடான பாலைவிட குளிர்ந்த பால் பலருக்கும் பிடிக்கும். அதை விதவிதமான பெயரிலும் சுவையிலும் ருசிக்கக் கைகொடுக்கிறார் திருச்சியைச் சேர்ந்த அம்பிகா நடராஜன்.

என்னென்ன தேவை?

மாம்பழத் துண்டுகள் - ஒன்றரை கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 2 கப்

எப்படிச் செய்வது?

மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு பாலைச் சேர்த்து சில நொடிகள் அடிக்கவும். விரும்பினால் ஒரு கப் ஐஸ்கிரீம் சேர்த்தும் அடிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

இளநீர் மில்க் ஷேக்

என்னென்ன தேவை?

இளநீர் - 1 கப்

இளந்தேங்காய் (இளநீர் வழுக்கை)

- ஒன்றரை கப்

குளிர்ந்த பால் - 1 கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

முந்திரி, பாதாம் (விரும்பினால்) - சிறிதளவு

எப்படிச் செய்வது?

இளந்தேங்காய் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். அதனுடன் இளநீர், பால் சேர்த்து அடிக்கவும். அதில் ஏலக்காய்த் தூள் கலந்து சில்லென்று பரிமாறவும். விரும்பினால் முந்திரி, பாதாம் ஆகியவற்றைப் பொடித்துச் சேர்க்கலாம்.

SCROLL FOR NEXT