சமையலறை

பிரக்கோலி பிரட்டல்

ப்ரதிமா

பிரக்கோலி - கால் கிலோ

வெங்காயம் - 1

எலுமிச்சைச் சாறு -1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய், வெந்தயம்

- தேவையான அளவு

பிரக்கோலியைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளியுங்கள். அதில் வெங்காயம் சேர்த்துச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரக்கோலியைச் சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சுக்குப் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள். அதிலேயே வெந்துவிடும். தேவையென்றால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடிவைத்து இரண்டு நிமிடம் வேக வைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கிவிடுங்கள்.

இதைச் செய்வது எளிது; இதனால் கிடைக்கும் சத்துகள் ஏராளம்.

SCROLL FOR NEXT