சமையலறை

தீபாவளி நல்விருந்து! - விரால் மீன் குழம்பு

ப்ரதிமா

விரால் மீன் - 8 துண்டுகள்

சின்ன வெங்காயம் - 20

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்

பூண்டுப் பல் - 3

தக்காளி - 2

வெந்தயம் - அரை டீஸ்பூன்

(வறுத்துப் பொடித்தது)

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

வெந்தயம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

மீனைக் கழுவிக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள். நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள். பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள். அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் மீன் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப் பொடி, மல்லித் தழை தூவி இறக்கிவிடுங்கள்.

SCROLL FOR NEXT