சமையலறை

வகை வகையான உணவு: வெஜ் பணியாரம்

ஆதிரை வேணுகோபாலன்

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 2 கப்

துருவிய கேரட் - கால் கப்

நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். துருவிய கேரட், வெங்காயம், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கொட்டிக் கலக்கவும்.

பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் மாவை குழி கரண்டியில் எடுத்து ஊற்றவும். நன்றாக வேகவிட்டு எடுத்தால் வெஜ் குழி பணியாரம் தயார்.

SCROLL FOR NEXT