சமையலறை

பலம் தரும் பேரீச்சை: சத்து உருண்டை

ப்ரதிமா

பேரீச்சம் பழம் - 9

பிரெட் துண்டுகள் - 8

கெட்டி அவல் - 2 டேபிள் ஸ்பூன்

பனீர் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

தூள் வெல்லம் - ஒரு டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

வறுத்துப் பொடித்த பட்டைப் பொடி - அரை டீஸ்பூன்

பால், எண்ணெய் - தேவையான அளவு

நெய் - அரை டீஸ்பூன்

பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். அதனுடன் பால் விட்டுப் பிசைந்து, 15 நிமிடம் மூடி வையுங்கள். வாணலியில் நெய் விட்டு அவலைப் போட்டுச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். பேரீச்சையை மசித்து அவலுடன் சேருங்கள். வெல்லம், ஏலக்காய்ப் பொடி, பட்டைப் பொடி, பனீர் சேர்த்து நன்றாகக் கலந்து நெல்லிக்காய் அளவுக்கு உருட்டிக்கொள்ளுங்கள். பிரெட் கலவையைக் கிண்ணம் போல் செய்து அதில் உருண்டைகளை வைத்து மூடி எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூடாக இருக்கும்போதே பொடித்த சர்க்கரையில் புரட்டியெடுத்தால் பேரீச்சை உருண்டைகள் தயார்.

SCROLL FOR NEXT