ஆட்டுக் கறி - அரை கிலோ
பெரிய வெங்காயம் -2
நெய் அல்லது நல்லெண்ணெய் -
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 2
(விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்)
மல்லித் தழை - சிறிதளவு
இஞ்சி - சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 15
சோம்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பூண்டுப் பல் - 8
ஆட்டுக் கறியைச் சுத்தம் செய்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தக்காளி விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து பத்து நிமிடம் ஊறவையுங்கள். பிறகு அதை குக்கரில் போட்டு வேகவையுங்கள். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். வேகவைத்துள்ள கறி மசாலாவை அதில் சேர்த்து மிதமான சூட்டில் சுருள வதக்கி, மல்லித்தழை சேர்த்து இறக்கிவிடுங்கள்.