‘பைசன்’, ‘தி ஃபேமிலி மேன்’, ‘டீசல்’ உள்ளிட்டவை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நாளை (நவ.21) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்துடன் வெளியான ‘டீசல்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது. இதில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அமேசான் ப்ரைமில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடரான ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 3 நாளை வெளியாகிறது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடிப்பில் இதன் முந்தைய சீசன்கள் பெற்ற அதீத வரவேற்பு இந்த சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘வேக்சின் வார்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரியில் ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’ படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் திரையரங்க வெளியீட்டின் போதே பெரும் சர்ச்சையை சந்தித்ததால் இப்படத்தின் ஓடிடி வெளியிட்டுக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.’
இது தவிர, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடரான ‘நடு சென்டர்’ ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.