ஓடிடி களம்

கண்ணுக்குத் தெரியாத வன்முறையை பேசும் ‘ரேகை’ - ஜீ 5 தளத்தில் ரிலீஸ்

செய்திப்பிரிவு

பாலஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘ரேகை’.

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் ஒன்றின் பாதிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் இது. தினகரன் எம் எழுதி இயக்கியுள்ளார். 7 எபிசோடுகள் கொண்ட இந்த க்ரைம் திரில்லர் தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் நவ.28-ம் தேதி வெளியாகிறது. இந்த வெப் தொடரை எஸ்.எஸ். குரூப் புரொடக் ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.

இயக்குநர் தினகரன் எம் கூறும்போது, “நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறை குறித்து இந்த சீரிஸ் பேசுகிறது. போலீஸில் புகாராகக் கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசவுகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம்.

ராஜேஷ் குமார் சார் கதையின் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும், இந்த க்ரைம் உலகின் சம்பவங்கள் எனக்கு நெருக்கமானவையாக இருந்தன” என்றார்.

SCROLL FOR NEXT