ஓடிடி விமர்சனம்

OTT Pick: Love Death + Robots - சயின்ஸ் ஃபிக்‌ஷன் விரும்பிகளுக்கு!

டெக்ஸ்டர்

அறிவியல் புனைக் கதைகளுக்கு எல்லா காலத்திலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. உலகம் முழுவதும் இந்த ஜானரில் ஏராளமான திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘லவ் டெத் + ரோபோட்ஸ்’.

கிட்டத்தட்ட ‘ப்ளாக் மிரர்’ வெப் தொடரின் மினியேச்சர் வடிவம் என்று இதனை சொல்லலாம். இரண்டு தொடர்களின் சாரம்சமும் ஒன்றுதான். ஆனால், இத்தொடர் முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவானது. ‘ப்ளாக் மிரர்’ தொடரைப் போலவே இதிலும் பெரும்பாலான தொடர்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது. எந்த வரிசையில் வேண்டுமானாலும் எபிசோட்களை தேர்வு பார்க்கலாம்.

இன்னொரு பாசிட்டிவ் அம்சம், எல்லா எபிசோடுகளும் குறைந்தது 6 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் வரை மட்டுமே. இதனால் மொத்த நான்கு வால்யூம்களையும் ஒரே நாளிலேயே கூட முடித்து விட முடியும். இதன் 4-வது வால்யூம் அண்மையில் வெளியாகியுள்ளது.

ஒரு சுவாரஸ்யமான குறும்படத்தை பார்த்த உணர்வை ஒவ்வொரு எபிசோடும் தரக்கூடும். எனினும் சில எபிசோடுகள் எந்தவித முடிவும் இன்றி அப்படியே முடிக்கப்பட்டிருப்பது சிலருக்கு ஏமாற்றத்தை தரலாம். மிக ஆழமான அறிவியல் நுட்பம் தொடர்பான கருத்துகள் சில நேரங்களில் தலைசுற்ற வைக்கலாம். எனினும் தீவிர சயின்ஸ் ஃபிக்‌ஷன் ரசிகர்களுக்கு இத்தொடர் ஒரு நல்ல விருந்தாக அமையும். நெட்ஃப்ளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

SCROLL FOR NEXT