நான்கு அல்லது ஐந்து எபிசோட் களை மட்டுமே கொண்ட ‘மினி சீரீஸ்’ என்கிற இணையக் குறுந் தொடர்கள் பல நேரங்களில் பேசு பொருளாகி பார்வையாளர்களை வெறித்தனமாக ஈர்த்துவிடுகின்றன. தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில், வெளியான வேகத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது ‘அடலசென்ஸ்’ (Adolescence).
தொழில்நுட்ப ரீதியாக ‘அட!’ போட வைக்கும் பல சுவாரசியமான ஐடியாக்களை காட்சிகளாக்கியிருக்கும் விதம் பார்வையாளர்களின் மனதை உறுதியாக மயக்கும். அதில் ஒன்று, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரே ஷாட்டில் சொல்லப்பட்டிருப்பது (ஆம்!).
ஒரு வீட்டை உடைத்து உள்நுழையும் சிறப்பு ஆயுதக் குழு (SWAT), பதின்மத்தில் அடிவைத்திருக்கும் 13 வயது பள்ளிச் சிறுவனை ஒரு கொலைக் குற்றவாளியாகக் கைது செய்கிறது. என்ன நடந்தது என்பதை 4 எபிசோட்களில் விரியும் தொடர் புதிர்களை அவிழ்க்கும்போது, பார்வை யாளர்கள் பெற்றோர் எனில் அவர்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
ஐரோப்பியப் பிள்ளை வளர்ப்பின் மீது மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது. இக்கேள்வி அகில உலகத்துக்கும் பொருத்தமாக இருப்பதுதான் இத்தொடர் தரும் ஆழமான தாக்கத்தின் மையப் புள்ளி. பெற்றோராகிய நாம், நம் குழந் தைகளை உண்மையில் அறிவோமா? ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்.