ஓடிடி விமர்சனம்

OTT Pick: பாட்டல் ராதா - குடியின் கொடுமையைச் சொல்லும் படைப்பு!

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘பாட்டல் ராதா’ படத்தை இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மது பழக்கம் கொண்ட ராதா மணி, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிறார். அவரை மீட்க அசோகன் (ஜான் விஜய்) நடத்தும் குடி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் அஞ்சலம்.

குடி மறுவாழ்வு மையத்தில் இருக்க முடியாமல் தவிக்கும் ராதா மணி, நண்பர்கள் சிலருடன் தப்பிக்கிறார். பிறகு அவருக்கு என்ன நேர்கிறது? குடியில் இருந்து மீண்டாரா? மனைவி குழந்தைகளோடு சேர்ந்தாரா, இல்லையா என்பதே திரைக்கதை.

மதுவால் குடும்பங்கள் படும் அவமானத்தையும் அவஸ்தையையும் உணர்த்தும் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதே களத்தைக் கொண்ட ‘பாட்டல் ராதா’ தனித்துவமானதுதான். இந்தப் படம் குடி கொடுமையைப் பற்றி அழுத்தமாகவே பேசுகிறது.

குடி, கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிக்கத்துக்குள் மனிதனை இழுத்துக் கொள்ளும் இயல்பை, நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய சமூகத்துக்குத் தேவையான இந்தப் படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT