ஓடிடி தகவல்

ஹீரோ ஆன ‘விலங்கு’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்

வேட்டையன்

சென்னை: வெப் சீரிஸ் தொடர் விலங்கு மற்றும் மாமன் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், ‘வாரண்ட்’ என்ற புதிய வெப் சீரிஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த தொடர் ஜீ5 தளத்தில் வரும் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த தொடரில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கவுசல்யா, காளி வெங்கட், நம்ரிதா, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது இந்த வாரண்ட் தொடர். இந்த வழக்குகள் மெல்லமாக தீவிரமடைந்து ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தை இது காட்டுகிறது. கோட்டை கருப்புசாமி என்ற காவலரை மையமாகக் கொண்டு இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது: “கோட்டை கருப்புசாமி என்பது பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் சிரமமானவர், நெகிழ்வானவர், மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அந்த நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது” என்றார்.

SCROLL FOR NEXT