ஓடிடி தகவல்

வெப் தொடராகிறது உத்தராகண்ட் சுரங்க விபத்து!

நிலா

உத்​த​ராகண்​டில் சார்​தாம் எனப்​படும் யமுனோத்ரி, கங்​கோத்ரி, கேதார்​நாத், பத்​ரிநாத் ஆகிய நான்கு முக்​கிய இந்து வழிபாட்​டுத் தலங்​களை இணைக்​கும் வகை​யில் பணிகள் நடை​பெற்​றன. இதன் ஒரு பகுதி​யாக, பிரம்​மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்​சாலை​யில், சில்க்​யாரா மற்​றும் தண்​டல்​கான் இடையே மலை​யைக் குடைந்து சுரங்​கப் பாதை அமைக்​கும் பணி நடை​பெற்​றது. இப்​பணி​யின்​போது ஏற்​பட்ட விபத்​தில் சுரங்​கம் இடிந்து விழுந்​ததில் 41 தொழிலா​ளர்​கள் உள்ளே சிக்​கிக் கொண்​டனர்.

கடந்த 2023-ம், ஆண்டு நடந்த இந்த விபத்​தில் சிக்​கிய 41 தொழிலா​ளர்​களும் 17 நாட்​களுக்​குப் பிறகு பல்​வேறு முயற்​சிகளுக்​குப் பின் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். இச்​சம்​பவத்தை மைய​மாகக் கொண்டு ‘டன்​னல் மேன்’ என்ற வெப் தொடர் உரு​வாகிறது. யாஷ்​ராஜ் பிலிம்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு ‘த ரயில்வே மேன்’ வெப் தொடரை இயக்​கிய சிவ் ராவைல் ஷோ ரன்​ன​ராக செயல்​படு​கிறார். அம்​பிகா பண்​டிட், மனன் ராவத் இயக்​கு​கின்​றனர்.

நெட் பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இதில் மாதவன், சந்​தீப் கிஷன், மகேஷ் மஞ்​சரேக்​கர் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். இந்​நிலை​யில் இத்​தொடரில் நடிகை தபு இணைந்​துள்​ளார். அவர் முக்​கிய கதாபாத்​திரத்​தில் நடிக்​கிறார். இதன் மூலம் அவர் முதன்​முறை​யாக வெப் தொடரில் நடிக்​கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT