ஓடிடி தகவல்

தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த சீரிஸை வெளியிடாதீர் - ஜி5 ஓடிடி தளத்​துக்கு மத்​திய அரசு அறிவுரை

நிலா

பிரபல தாதா​வான லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணை​யத் தொடரை வெளி​யிட வேண்​டாம் என ஜி- 5 ஓடிடி நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

பஞ்​சாபைச் சேர்ந்​தவர் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். கொலை, ஆள் ​கடத்​தல், பணம் பறிப்பு என பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய இவர், இப்​போது குஜ​ராத் சிறைச்​சாலை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அங்​கிருந்​த​படியே தனது கூட்​டாளி​கள் மூலம் சமூக விரோத செயல்​களில் ஈடு​பட்டு வரு​வ​தாகக் கூறப்படு​கிறது.

பாடகர் சித்து மூஸ்​வாலா​வின் படு​கொலை, சல்​மான் கான் வீட்டில் சில மாதங்​களுக்கு முன் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது, சல்மானின் நெருங்​கிய நண்​பரும் மகா​ராஷ்டிர மாநில முன்​னாள் அமைச்​சரு​மான பாபா சித்​திக், சுட்​டுக் கொல்​லப்​பட்​டது உள்பட பல்​வேறு வழக்​கு​களில் பிஷ்னோய் கும்​பல் ஈடு​பட்​டு உள்ள​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை கதை இணை​யத் தொட​ராக உரு​வாகி உள்​ளது. ‘லாரன்ஸ் ஆஃப் பஞ்​சாப்’ என்று தலைப்பு வைக்​கப் பட்​டுள்ள இத்​தொடர் ஜி 5 ஓடிடி தளத்​தில் நாளை (ஏப்​.27) வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற குற்​ற​வாளி​யின் வாழ்க்​கையை மையப்​படுத்தி எடுக்​கப்​படும் இத்தொடர், குற்​றச் செயல்​களைப் போற்​றும் வகை​யில் இருப்​ப​தாகப் பஞ்​சாப் காவல்​துறை கவலை தெரி​வித்​தது.

இந்த இணை​யத் தொடருக்​குத் தடை விதிக்க வேண்​டுமென பஞ்சாப் காங்​கிரஸ் தலை​வர் அமரிந்​தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் மற்​றும் ஹரி​யாணா உயர் நீதி​மன்​றங்களில் பொதுநல வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், இத்​தொடரின் உள்​ளடக்​கத்​தில் குற்​றச்​செயல்களைப் பெரு​மைப்​படுத்​தும் சாத்​தி​யக்​கூறுகள் உள்​ள​தால் சர்ச்​சைக்​குரிய தொடரை வெளி​யிட வேண்​டாம் என ஜீ 5 ஓடிடி தளத்​துக்கு மத்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம் அறிவுறுத்​தி​யுள்​ளது. இதனால், இந்​தத் தொடரின் வெளி​யீடு தற்காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT