ஓடிடி தகவல்

இந்த வார ஓடிடி ரிலீஸ் - ‘அன்பே டயானா’ முதல் ‘ஐ நோபடி’ வரை

ப்ரியா

இந்த வாரத்தில் ‘அன்பே டயானா’ முதல் ‘ஐ நோபடி’ வரை  பல படங்கள் ஓடிடியில் வெளியாகி திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உள்ளன. பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.

பபிதா சிங் ரிபோர்ட்டிங்:

போலீஸ் கதை பிரியர்களுக்கானது இந்த ‘பபிதா சிங் ரிபோர்ட்டிங்’. அம்பிகா பண்டிட் இயக்கி உள்ள இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், அன்ஷுமான் புஷ்கர், பருன் சோப்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இந்திப் படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது.  

சும்பக்:

குடும்ப கலாட்டா நகைச்சுவைப் படமான இதை அதிஷ் கபாடியா எழுதி இயக்கி உள்ளார். சுமீத் வியாஸ், நீனா குப்தா, தேவன் போஜானி அமிரா தஸ்துர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

மைக்கேல்:

பாப் இசையின் மன்னன் மறைந்த மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது, அவரைப் பற்றிய இந்த பயோ பிக். ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 29-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

பந்தர்:

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் பாபி தியோல், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த இந்தி மொழிப் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

அன்பே டயானா:

பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘அன்பே டயானா’. காதல் நகைச்சுவைப் படமான இதில் ரம்யா ரங்கநாதன், சேத்தன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஐ நோபடி:

நிஸ்ஸாம் பஷீர் இயக்கதில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி திருவோத்து, விஜயராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாள மொழி படம், ஆகஸ்ட் 25-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டார்க் மேட்டர் சீசன் 2:

ஜோயல் எட்ஜர்டன், ஜெனிஃபர் கான்னெல்லி நடித்திருக்கும் இந்த ஆங்கில அறிவியல் புனைகதையின் இரண்டாவது சீசனின் முதல் எபிசோட் ஆகஸ்ட் 27-ம் தேதி ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு எபிசோட் வீதம் அக்டோபர் 30-ம் தேதி வரை அடுத்த 10 எபிசோடுகளும் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT