ஓடிடி தகவல்

‘ஜெயிலர் 2’ முதல் ‘ரணபாலி’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

ப்ரியா

மனதில் தங்கிவிட்ட கொண்டாடத்தின் மகிழ்ச்சி போல வார இறுதியை ரசனைக்குள்ளாக்க இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.

ஜெயிலர் 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்திருக்கும் இந்தப் படம் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனின் ஓய்வு கால வாழ்க்கையைச் சொல்லும் இந்தப் படம் நவம்பர் 12 அன்று அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டாய்ரா: மேஹ்னா குல்சர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘டாய்ரா’. இந்தப் படத்தில் கரீனா கபூர், ப்ரித்விராஜ் சுகுமாரன், பரமோத் சங்கீ உள்ளிட்டோர் நடத்துள்ளனர். செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வந்த இந்த த்ரில்லர் படம் நவம்பர் 13 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தி தேர்ட் மர்டர்: சுனில் இப்ராஹிம் இயக்கத்தில் வெளியான படம் ‘தி தேர்ட் மர்டர்’. இந்தப் படத்தில், சைஜு க்ருப், இந்திரன்ஸ், வினய் ஃபோர்ட், அனன்யா, லியோனா லிஷோய், மணிகண்டன் பட்டாபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த சைக்கலாஜிகல் க்ரைம் த்ரில்லர் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 13 அன்று வெளியாக இருக்கிறது.

பாந்த்ரா: அருண் கோபி இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பாந்த்ரா’. இந்தப் படத்தில் திலீப், தமன்னா, டினோ மோரியா, மம்தா மோகன்தாஸ், கலாபவன் ஷாஜோன், சரத்குமார், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2023-ம் ஆண்டு திரையராங்குகளில் வெளியான இந்த ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் நவம்பர் 13 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

கிரேஸி கல்யாணம்: பத்ரப்பா ராஜுலா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘கிரேஸி கல்யாணம்’. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜய் கிருஷ்ண நரேஷ், அகில் ராஜ் உத்தேமரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த நகைச்சுவைப் படம் நவம்பர் 13 அன்று ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஹேப்பி ஜர்னி: அபிராம் நாயுடு இயக்கத்தில் வெளியான படம் ‘ஹேப்பி ஜர்னி’. இந்தப் படத்தில் வம்ஷிதர் கவுட், பாயல் ராதாகிருஷ்ணா,  ரவி சிவா தேஜா, அன்னபூர்ணா, ஆமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏழு பெண்கள் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றி சொல்லும் இந்த சாகஸ படம் நவம்பர் 12 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

புஷ்பக விமானம்: சதீஷ் ரெட்டி மல்லிடி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘புஷ்பக விமானம்’. இந்தப் படத்தில் சாய் ரோனக் கட்குரி, மதோ தாமராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2021-ம் ஆண்டில் வெளியான இந்த அறிவியல் புனைவு படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நவம்பர் 12 அன்று வெளியாகிறது. 

ரணபாலி: ராகுல் சங்​கிருத்​யன் இயக்​கத்தில் வெளியான படம் ‘ரணபாலி’. இந்தப் படத்தில் விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா, அர்​னால்ட் வோஸ்​லூ, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்னை பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அக்டோபர் 16 அன்று திரை அரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இந்த தெலுங்கு படம் நவம்பர் 13 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT