ஓடிடி தகவல்

‘மீசைய முறுக்கு 2’ முதல் ‘ஐ அம் கேம்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்

ப்ரியா

விடுமுறை வரும் முன்பே திரையரங்குகளில் வெளியாகி பண்டிகைக்கான உற்சாகத்தை தொடங்கி வைக்க, வார விடுமுறையோடு தீபாவளியை கொண்டாடிட, இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படங்களின் பட்டியல் இது.

மீசைய முறுக்கு 2: ஹிப் ஹாப் ஆதியின் இயக்கம், நடிப்பில் வெளியான படம், ‘மீசைய முறுக்கு 2’. இந்தப் படத்தில் அவருடன் சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன், ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். செப்டம்பர் 25-ம் தேதி திரையராங்குகளில் வெளியான இப்படம் இன்று (நவம்பர் 6) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

நூறு கோடி வானவில்:  இயக்குநர் சசியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்’. இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்த இந்தப் படம் இன்று (நவம்பர் 6) ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.

தி கிராண்ட் மாஸ்டர்: வெற்றி செழியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இந்தப் படத்தில் அபர்ணதி, அஸ்வின், லிங்கேஷ், சுரேஷ் மேனன், தமிழரசி, அன்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விளையாட்டு உலகில் உள்ள சாதிய அரசியலைப் பற்றி பேசும் இப்படம் செப்டம்பர் 25 அன்று  திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் இன்று (நவம்பர் 6) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

அனாகபள்ளி: ககேஷ் தம்மிநேனி இயக்கத்தில் வெளியான படம் ‘அனகாபள்ளி’. இந்தப் படத்தில் விக்ரம் சஹிதேவ், சந்த்யா வசிஷ்டா, தாரக்  பொன்னப்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த தெலுங்கு படம் நவம்பர் 3 அன்று சன் நெக்ஸ்ட்,  பிரைம் வீடியோ ஓடிடி தளங்களில் வெளியானது.

பா பா பிளாக் ஷீப்: குனி மஞ்சிகந்தி இயக்கத்தில் வெளியான படம்  ‘பா பா பிளாக்‌ ஷீப்’. இப்படத்தில் அக்‌ஷய் லகுசானி, விஸ்மயா ஸ்ரீ, விஷ்ணு ஓய், மால்வி மல்ஹோத்ரா, சம்ரீதீ அர்யல் உபேந்த்ரா  லிமாயே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த தெலுங்கு ஆக்‌ஷன் காமெடி படம் இன்று (நவம்பர் 6) பிரைம் வீடியோ, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

ஐசியூ: ஜார்ஜ் வர்கீஸ் இயக்கத்தில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘ஐசியூ’. இந்தப் படத்தில் பிபின் ஜார்ஜ், பாபுராஜ், முரளி கோபி, விஸ்மயா அனீஷ், மீரா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 27 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த மலையாளப் படம் இன்று (நவம்பர் 6) சன் நெக்ஸ்ட் ஓடிடி  தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஐ அம் கேம்: நஹாஸ் ஹிதாயத் இயக்​கத்தில் வெளியான படம் ‘ஐ அம் கேம்’. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்​வ​நாதன் உள்ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த அதிரடி த்ரில்லர் படம் இன்று (நவம்பர் 6) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT