ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலிமேன்’ வெப்தொடரின் 3-வது சீசன், நவ. 21-ம் தேதி வெளியானது. அமேசான் பிரைமில் வெளியான இதில் மனோஜ் பாஜ்பாய், ஸ்ரீகாந்த் திவாரி என்ற ஸ்பையாக நடித்துள்ளார்.
இதில் பிரியாமணி, ஜெய்தீப் அலாவத், நிம்ரத் கவுர், ஷரிப் ஹாஸ்மி உள்பட பலர் நடித்துள்ளனர். வெளியானதில் இருந்தே இந்த சீசனும் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் வெளியான முதல் வாரத்தில், இந்தியாவில் இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடராக ‘தி ஃபேமிலி மேன் 3 ’ சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே கூறும்போது, “பார்வையாளர்களின் அசைக்க முடியாத அன்புதான் இந்தத் தொடரை பல்வேறு மொழிகளில் பிரபலமாக்கி இருக்கிறது.
நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகும், இப்போது கிடைத்திருக்கிற வரவேற்பு, எங்கள் முயற்சிகளை மதிக்கிறார்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர்.