சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி சர்மா உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘சூப்பர் சுப்பு’. மாலிக் ராம் இயக்கியுள்ளார். சிலகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தத் தொடரில் கெட் அப் சீனு, மானசா சவுத்ரி, ஜீவன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்தொடர் ஜூலை 2-ல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இந்த வெப் தொடர் பற்றி இயக்குநர் மாலிக் ராம் கூறும்போது, “’சூப்பர் சுப்பு’ மூலம் நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம். அதே நேரம் பாலியல் கல்வி குறித்த உரையாடல்களை மறைத்துப் பேசாமல், இயல்பாகப் பார்க்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டோம். அதற்கான சிறந்த வழி நகைச்சுவை தான்.
சிரிப்பு உடனடியாகத் தயக்கத்தை உடைத்துவிடுகிறது. இந்தக் குழப்பங்களின் மையத்தில், உலகில் தனது இடத்தைத் தேடும் அப்பாவியான சுப்பு இருக்கிறார். இந்தத் தொடர் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றியும் பேசுகிறது” என்றார்.