ஓடிடி தகவல்

‘பியார் பிரேமா கல்யாணம்’ திருமணத்துக்​குப் பிறகு நடக்கும் கதை!

நிலா

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கிய இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படம் மூலம் நாயக​னாக அறி​முக​மாகிறார். இப்​படத்தை அவரே எழு​தி, இயக்​கி​யுள்​ளார். ‘குடும்​பஸ்​தன்’ சான்வீ மேக்னா நாயகி​யாக நடித்​துள்ள இதில் ராதிகா சரத்​கு​மார், யோகி பாபு, எம்​.எஸ்​.​பாஸ்​கர் என பலர் நடித்துள்​ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்​துள்​ளார். இந்தப்​படம் நெட்ஃப்​ளிக்ஸ் தளத்​தில் நாளை (ஆக.21) ரிலீஸ் ஆகிறது.

இப்​படம் பற்றி இளன் கூறும்​போது, “முதலில் நானே நடித்து இயக்க வேண்​டும் என்​று​தான் ‘பி​யார் பிரேமா காதல்’ படத்தை எழு​தினேன். அப்​போது என்னை நம்பி படத்​தின் பட்​ஜெட்​டான ரூ.2 கோடியை முதலீடு செய்ய யாரும் இல்​லை. அதனால் இயக்குநராக என்னை வளர்த்​துக்​கொண்டு நடிக்​கலாம் என்று நினைத்தேன்.

மூன்று படம் இயக்​கி​விட்டு நடிக்​கலாம் என்று நினைத்​தேன். அதிர்ஷ்ட​வச​மாக 2 படங்​கள் இயக்​கியதுமே மூன்​றாவ​தாக ஹீரோ​வாகி விட்​டேன். ‘பி​யார் பிரேமா காதல்’ படம் கல்யாணத்தில் முடிந்​தது. இது கல்​யாணத்​துக்​குப் பிறகு நடக்​கும் கதை.

இந்​தப் படத்​துக்​காக உடல் எடை அதி​கரித்​தேன். இது நேரடி​யாக ஓடிடி- யில் வெளி​யா​வ​தால் திரையரங்​கில் வரும் கைதட்​டல்​கள் கிடைக்​காது. ஆனால், எதிர்​காலத்​தில் ஓடிடி தளங்​களைத் தவிர்க்க முடி​யாது. இனி நடிப்​பா, இயக்​க​மா? என்று கேட்​கிறார்​கள். வருடம் ஒரு படத்​தில் நடிக்​க​வும் ஒரு படத்தை இயக்​க​வும் திட்​ட​மிட்​டிருக்​கிறேன்” என்​றார்.

SCROLL FOR NEXT