ஓடிடி தகவல்

“ஹிருத்​திக் ரோஷன் தயாரிப்பில் நடித்​தது எனக்கு பெருமை” - பார்​வதி திருவோத்து நெகிழ்ச்சி

ப்ரியா

ஹிருத்​திக் ரோஷன் தயாரித்​துள்ள வெப் தொடர் ‘ஸ்​டோர்ம்’. அமேசான் பிரைம் வீடியோ​வில் ஒளிபரப்​பாக இருக்​கும் இத்​தொடரில் பார்​வதி திரு​வோத்​து, அலயா எஃப், சிருஷ்டி ஸ்ரீவஸ்தவா, ரமா சர்​மா, சபா ஆசாத் ஆகியோர் நடித்​துள்​ளனர்.

அஜித் பால் சிங் இயக்​கி​யுள்ள இத்​தொடர், மும்​பை​ பின்​னணி​யில் ஆக் ஷன் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்​ளது. வீட்​டு​வச​தித் திட்ட மோசடி​யில் சிக்​கிக் கொள்​ளும் 5 பெண்​களின் போராட்​டமே இத்தொடர் என்​கிறார்​கள்.

          

இதில் நடித்​தது பற்றி பார்​வதி திரு​வோத்து கூறும்​போது, “பிரைம் வீடியோ போன்ற தளங்​களில் ஒரு படைப்​பின் அங்​க​மாக இருப்பது கூடு​தல் பொறுப்​பைத் தரு​கிறது. கதை​யின் நோக்​கம் சிதை​யாமல் நேர்​மை​யாக​வும் அனை​வரை​யும் கவரும் வகையிலும் இருக்க வேண்​டியது அவசி​யம். நடிகர் ஹிருத்​திக் ரோஷன் தயாரித்​துள்ள இத்​தொடரில் நானும் இணைந்திருப்பதைப் பெரு​மை​யாகக் கருதுகிறேன்.

ஒரு கதையை அதன் உண்​மைத்​தன்மை மாறாமல், ரிஸ்க் எடுத்து உரு​வாக்​கும் தயாரிப்​பாளர்​கள் இருக்​கும் போது, நடிகர்​களுக்கு அதிக சுதந்​திரம் கிடைக்​கிறது. வெறும் நடிப்பு என்​ப​தைத் தாண்டி, ஒரு கதா​பாத்​திரத்​தின்​ ஆழத்​தை வெளிப்​படுத்​த இத்தொடர்​ வழி​வகுத்​துள்​ளது. என்​னைப்​போன்​ற சவால்​களை விரும்​பும்​ நடிகர்​களுக்​கு இத்​தகைய ஆதர​வு மிகவும்​ முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT