ஹைதராபாத்: ராம்சரண் நடித்த ‘பெத்தி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண்,ஜான்வி கபூர் நடிப்பில் உருவான ’பெத்தி’ படம் கடந்த ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது.படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வெளியான போதிலும் படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை குவித்தது.
ஜான்வி கபூரின் கதாபாத்திரம் குறித்து இணையத்தில் எழுந்த கடும் விவாதங்களையும் தாண்டி, ரசிகர்கள் இப்படத்தைக் காண திரையரங்குகளில் பெருமளவில் குவிந்தனர். இதன் காரணமாக 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றிகளில் ஒன்றாக 'பெத்தி' உருவெடுத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.286 கோடியும், உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ338.98 கோடியும் வசூலித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஜூலை 9 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு தவிர்த்து தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.