ஓடிடி தகவல்

ஓடிடியில் ‘பரிமளா அண்ட் கோ’ ஜூலை 10-ல் ரிலீஸ்

ஸ்டார்க்கர்

ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி ‘பரிமளா அண்ட் கோ’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5-ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரிமளா அண்ட் கோ’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கைப் போல் அல்லாமல் ஓடிடி தளத்தில் வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. காமெடி கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டது.

ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம், தமிழ்க்குமரன் நிறுவனம் மற்றும் பாண்டிராஜ் மூவரும் இணைந்து இப்படத்தினை தயாரித்திருந்தனர். ‘பஞ்சதந்திரம்’ படத்துக்குப் பிறகு ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT