இந்த வாரம் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகும் படங்கள், தொடர்களின் பட்டியல் இது.
உயிர்: மலையாள மொழி க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘உயிர்’ (Uyir) ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எம்.பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரோஷன் மேத்யூ, பைஜு சந்தோஷ், அதுல்யா சந்திரா நடித்துள்ளனர். இந்தப் படம் ஆக்.4-ம் தேதி ஜியோ ஹட் ஸ்டாரில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் இந்தப் படம் காணக் கிடைக்கும்.
மைன் வாப்பஸ் ஆவுங்கா: இந்தி மொழி பிரியட் டிராமாவான இந்தப் படம் (Main Wapas Aaunga) ஜூன் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தில்ஜி தோசாஞ், நசிருதீன் ஷா, வேதாங் ரைனா, சர்வாரி வாக் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆக.7-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
லெனின்: ஆக்ஷன் டிராமாவான தெலுங்கு படம் லெனின் (Lenin) ஜூலை 10–ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுனில் வர்மா, பிரம்மாஜி, அகில் அக்கினேனி நடித்துள்ள இந்தப் படத்தை முரளி கிஷோர் அப்புரு இயக்கியுள்ளார். தமன் இசையமத்துள்ளார். இந்தப் படம் ஜீ5 தளத்தில் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
இதயம் முரளி: அதர்வா முரளி, ஃபஹத் ஃபாசில், நடராஜன் நட்டி, தமன், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் நடித்துள்ள இந்த தமிழ்ப் படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் ஆக.7-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
கட்டாளன்: ஆக்ஷன் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த இந்த மலையாளப் படம் (Kattalan) மே 28-ம் தேதி திரைக்கு வந்தது. பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபிர் துகான் சிங், அந்தோணி வர்கீஸ், ஜெகதீஸ், சுனில் வர்மா, சித்திக், துஷாரா விஜயன் நடித்துள்ளனர். இந்தப் படம் மனோரமாமேக்ஸ் தளத்தில் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
ஆபரேஷன் சஃபேத் சாகர்: தி அன்டேல்டு ஸ்டோரி ஆப் தி கார்கில் வார்: ஓனிசென் இயக்கியுள்ள இந்தப் போர் பற்றிய வெப் தொடர் (Operation safed sagar) 8 எபிசோடுகளைக் கொண்டது. சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, தியா மிர்ஷா நடித்துள்ள இந்த வெப் தொடர் ஆக.7-ம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
நூறு சாமி: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடித்திருக்கும் இந்தப் படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற இந்தப் படம் ஆக.7-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
வதந்தி 2: வதந்தி முதல் சீசன் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் வர இருக்கிறது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த சீசனில் சசி குமார் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் தளத்தில் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.