ஓடிடி தகவல்

ஓடிடி-யில் வெளியானது ஆஸ்கர் செல்லும் ‘ஹோம்பவுண்ட்’!

செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் திரைப் படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற இந்திப் படம் இந்தியா சார்பில் அதிகாரப் பூர்வமாக அனுப்பப்படுகிறது.

நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் என பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப் படம் செப்.26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT