ஓடிடி தகவல்

ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் ‘நூறு கோடி வானவில்’

நிலா

சசி எழுதி இயக்​கி​யுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்​தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்​னானி முதன்மை கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ள இப்​படத்தை மாதவ் மீடியா சார்​பில் பாலாஜி கபா மற்​றும் அருண் அருணாசலம் புரொடக் ஷன் சார்​பில் அருண் அருணாசலம் தயாரித்​துள்​ளனர். இதன் படப்​பி​டிப்பு எப்​போதோ முடிவடைந்​து​விட்​டாலும் ரிலீஸ் ஆகாமல் இருந்​தது.

இந்​நிலை​யில் இப்​படம் நவ. 6-ல், ஜீ 5 ஓடிடி தளத்​தில் நேரடி​யாக வெளியாகிறது. கட்​ட​ணம் செலுத்​திப் பார்க்​கும் முறை​யில் இப்​படத்​தைக் காணலாம். படம் பற்றி இயக்​குநர் சசி கூறும்​போது, “இந்​தப் படம் காதல் பற்​றியும், மனிதர்​கள் வளர வளர உறவு​கள் எவ்​வாறு மாறுகின்​றன, அவர்​களின் எதிர்​பார்ப்​பு​கள் எவ்​வாறு மாறுகின்​றன, வாழ்க்கை அவர்​களுக்கு எத்​தகைய கடினமான முடிவு​களை முன் வைக்​கிறது என்​ப​தைப் பற்​றிப் பேசுகிறது.

காதல் எப்​போதும் நேரான பாதையில் செல்​லும் பயண​மாக இருப்​ப​தில்லை.

நாம் எடுக்​கும் முடிவு​கள், அக்​கறை கொண்​டிருக்​கும் மனிதர்​களின் வாழ்க்​கை​யில் நீண்​டகாலத் தாக்​கத்தை ஏற்​படுத்​தக் கூடும். ரசிகர்​கள் இந்​தக் கதாபாத்​திரங்​களு​டனும் அவர்​களின் அனுபவங்​களு​டனும் தங்​களை இணைத்​துப் பார்த்து, தங்​கள் வாழ்க்​கை​யின் சில அம்​சங்​களை இந்​தப் படத்​தில் பார்ப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT