ஓடிடி தகவல்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’

நிலா

பிரதீப் ஆண்​டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி, மகிழ் திரு​மேனி ஆகியோர் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள வெப்​தொடர், ‘மிஸ்​டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’. அப்​துல் கபீஸ் இயக்​கி​யுள்ள இதை ஜெகன் பாஸ்கரன் தயாரித்​துள்​ளார்.

கார்ப்​பரேட் அலு​வல​கப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இந்த தொடர், இளம் தம்​ப​தி​யான அறிவு மற்​றும் ஐஸ்​வர்​யாவைச் சுற்றி நகர்​கிறது. இரு​வரும் ஒரே ஐடி நிறு​வனத்​தில் வேலை செய்​கிறார்​கள். அந்த நிறு​வனத்​தின் கடுமையான விதி​முறை​யின்​படி, ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஒன்​றாகப் பணிபுரியக் கூடாது.

இத​னால் தங்​களது வேலை​யையும் பொருளாதார நிலை​யையும் பாது​காக்க, திரு​மண உறவை மறைத்து, அந்​நியர்​களைப் போல நடிக்க இரு​வரும் முடிவு செய்​கின்​றனர்.

இதற்​காக அவர்​கள் புதுப்​புது பொய்​களைக் கூற வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது. பிறகு என்ன நடக்​கிறது என்​பதை மையப்​படுத்தி இந்த வெப் தொடர் உரு​வாகி​யுள்​ளது. நகைச்​சுவைக்கு மத்​தி​யில், இன்​றைய சூழலில் பணிபுரியும் இளம் தம்​ப​தி​களின் வாழ்க்​கைப் போராட்​டங்​கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்​கல்​கள் மற்​றும் கார்ப்​பரேட் வாழ்க்​கை​யின் அன்​றாட யதார்த்​தங்​களை இந்​தத் தொடர் பேசுகிறது.

இது ஜியோஹாட்​ஸ்​டார் தளத்​தில் நவ.18-ம் தேதி முதல் வெளியாகிறது. ஒவ்​வொரு புதன்​கிழமையும் 4 புதிய எபிசோடுகள் வெளியாகும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT