மாதவன் நடிப்பில் உருவான பயோகிராபி படமான ‘ஜிடிஎன்’ செப்டம்பர் 4-ம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கான ‘ஜி.டி.என்’ படத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்திருக்கிறார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.
‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்தப் படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இந்தத் தகவலை நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா சவுத் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஒரு மனிதனோட வாழ்க்கை இந்த நாட்டோட வரலாறு’ என்று தெரிவித்து, படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக இருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் (GDN) ‘ஜிடிஎன்’. இந்தப் படத்தில் மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.