ஓடிடி தகவல்

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ‘லவ் ஆல்வேஸ்’

நிலா

கொரி​யா​வில் வரவேற்​பைப் பெற்ற வெப் தொடர், ‘ஹியர் வி கோ அகைன்’. இத்​தொடரைத் தழுவி உரு​வாகி​யுள்ள வெப் தொடர், ‘லவ் ஆல்​வேஸ்’. காதல், குடும்​பம், நகைச்​சுவை மற்​றும் வயதை தலைகீழாக மாற்​றும் விசித்​திர​மான திருப்​பு​முனை​யுடன் உரு​வாகி​யுள்ள இத்​தொடர் தமிழ் ஹாட்​ஸ்​டார் ஸ்பெஷல் ஆகும். இதன் டீஸர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. ரிலீஸ் தேதி விரை​வில் அறிவிக்​கப்பட இருக்​கிறது.

கிராஸ் பிக்​சர்ஸ் மற்றும் குரு பிலிம்ஸ் இணைந்து தயாரித்​துள்ள இத்​தொடரில், கவுரி கிஷன், ரம்​ஜான் முகமது, ஜெயப்​பிர​காஷ், ஜெயசு​தா, மாயாகிருஷ்ணன் என பலர் நடித்​து உள்​ளனர். இத்​தொடரில் நடித்​தது பற்றி கவுரி கிஷன் கூறும்​போது, “இது ஒரு புது​மை​யான கதைக் களம். அதே நேரம், நகைச்​சுவை, உணர்ச்​சிகள், உறவு​கள் என எல்​லாமே நமக்கு நெருக்​க​மாக இருக்​கும்.

வழக்​க​மான உணர்​வு​களை முற்​றி​லும் புதிய கோணத்​தில் பார்க்க முடிகிறது என்​பது​தான் என்னை இந்த தொடருக்​குள் கொண்டு வந்​தது. இதில் வரும் ‘வயது மாறும்’ பின்​னணி, கதை​யில் நிறைய கலகலப்​பான விஷ​யங்​களைச் சேர்த்​துள்​ளது. அதனுள்ளே காதல், குடும்​பம், ஏக்​கம் என இதயத்​தைத் தொடும் அம்​சங்​கள் நிறைந்​துள்​ளன. ரசிகர்​கள் இந்த உணர்​வுப் பூர்​வ​மான பயணத்​தைக் கண்​டிப்​பாக ரசிப்​பார்​கள்” என்​றார்.

SCROLL FOR NEXT