ஓடிடி தகவல்

2026-ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் வசமான தெலுங்கு படங்களின் பட்டியல்

ஸ்டார்க்கர்

2026-ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ள தெலுங்கு படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

2026-ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தாங்கள் கைப்பற்றியுள்ள தென்னிந்திய படங்களின் பட்டியலை அறிவித்து வருகிறது. பொங்கல் தினத்தன்று தமிழ் படங்களின் பட்டியலை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களின் பட்டியலை நேற்று (ஜன.16) அறிவித்துள்ளது.

அதன்படி, பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’, நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’, துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’, ஃபகத் பாசில் நடித்துள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘VD14’, த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் இணைந்துள்ள ‘ஆதர்ஷ குடும்பம் – ஹவுஸ் நம்பர்:47’, ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’, ரோஷன் நடித்துள்ள ‘சாம்பியன்’, விஸ்வாக் சென் நடித்துள்ள ‘ஃபங்கி’, சித்தாரா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 37-வது படம், சங்கீத் ஷோபன் நடித்துள்ள ‘ராக்காசா’, ஷர்வானந்த் நடித்துள்ள ‘தி பைக்கர்’, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘418’ ஆகிய படங்களை கைப்பற்றி இருக்கிறது.

தெலுங்கு படங்களின் ஓடிடி உரிமையினை கைப்பற்றி இருப்பது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், “பிரமாண்டம், துணிச்சலான கதைகள் மற்றும் ஆழமான உணர்வுப்பூர்வமான கதைகள் என தெலுங்கு சினிமா அதன் ரசிகர்களுடன் நல்ல பிணைப்பை கொண்டுள்ளது.

பிரம்மாண்டம், எண்டர்டெயின்மெண்ட், வலுவான கதைகள், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் என இந்த வருடம் 2026-ல் பல தரமான படங்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT