கதிர், திவ்யா பாரதி, சத்யா, பூர்ணிமா ரவி உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘லிங்கம்’. தமிழ் க்ரைம் த்ரில்லரான இத்தொடரை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்னராக வழிநடத்தியுள்ளார். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
“ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றத்தைச் சொல்லும் விறுவிறுப்பான குற்றம் மற்றும் பழிவாங்கல் கதை ‘லிங்கம்’. ஒரு கொலைக் குற்றச்சாட்டால் லிங்கத்தின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது.
கவுரவம், அடையாளம் மற்றும் சீருடை அணியும் எதிர்காலம் என்ற கனவுகளுடன் தொடங்கும் அவரது பயணம், பின்னர் அநீதி, பழிவாங்கல் நிறைந்த வன்முறைப் பாதையாக மாறுகிறது. அது எப்படி, எங்கு முடிகிறது என்பது கதை” என வெப் தொடர்குழு கூறியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.