ஓடிடி தகவல்

தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தென்னிந்திய சினிமாவில் ரூ.4,000 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

தென்​னிந்​திய ஊடகம் மற்​றும் பொழுது​போக்கு துறை​யில் ஜியோ ஹாட்​ஸ்​டார் அடுத்த 5 ஆண்​டு​களில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்​ய​ உள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக தமிழ்​நாடு அரசுடன் புரிந்​துணர்வு கடிதத்​தில் கையெழுத்​திடப்​பட்​டது.

இது தொடர்​பான சென்​னை​யில் நடந்த நிகழ்​வில் துணை முதலமைச்​சர் உதயநிதி ஸ்டா​லின், நாடாளு​மன்ற உறுப்​பினர் கமல்​ஹாசன், தமிழ்​நாடு செய்​தித்​துறை அமைச்​சர் மு.பெ.சாமிநாதன், மோகன்​லால், நாகார்​ஜு​னா, விஜய் சேதுபதி மற்​றும் தென்​னிந்​திய திரை உலக பிரபலங்​கள் பங்​கேற்​றனர்.

ஜியோ ஹாட்​ஸ்​டாரின் சிஇஓ கெவின் வாஸ், மார்கெட்​டிங் அதி​காரி சுஷாந்த் ஸ்ரீராம், கிருஷ்ணன் குட்டி உள்ளிட்​டோர் தலை​மை​யில் இந்த ஒப்பந்​தம் கையெழுத்​தானது. இந்த ஒப்​பந்​தம் தமிழ்​நாட்​டின் படைப்​பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்​படுத்​தி, தென்​னிந்​திய படைப்​பாளி​களை உலக அரங்​குக்​குக் கொண்டு செல்​லும் முயற்​சி​யாகக் கருதப்​படு​கிறது.

இது சர்​வ​தேச முதலீட்டு வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தோடு, வேலை​வாய்ப்பு உரு​வாக்​கத்​தி​லும் முக்​கிய பங்கு வகிக்​கும் என துணை முதலமைச்​சர் உதயநிதி தெரி​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் பிரபல தொடர்​களின் புதிய சீசன்​கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்​சத்​திரங்​கள் கொண்ட தயாரிப்​பு​கள், ரியாலிட்டி ஷோக்​கள் ஆகிய​வற்​றின் 25 டைட்​டில்​கள்​ வெளியிடப்பட்​டன.

SCROLL FOR NEXT