ஓடிடி தகவல்

“இயக்குநரின் நடிகையாக இருப்பதால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்” - ஜெயசுதா மகிழ்ச்சி

நிலா

கவுரி கிஷன், மலை​யாள நடிகர் ரம்​ஜான் முகமது, ஜெயப்​பிரகாஷ், ஜெயசுதா, மாயா கிருஷ்​ணன் என பலர் நடித்​துள்ள வெப் தொடர், ‘லவ் ஆல்​வேஸ்’. கொரியாவில் வரவேற்​பைப் பெற்ற, ‘ஹியர் வி கோ அகைன்’ என்ற வெப்​தொடரைத் தழுவி உரு​வாகி​யுள்ள இது, ஜியோ ஹாட்​ஸ்டாரில் வெளியாகி​யுள்​ளது. இதன் அறி​முக விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. தொடரில் நடித்​துள்​ளவர்​கள் பங்​கேற்​றனர்.

இதில் பழம்​பெரும் நடிகை ஜெயசுதா பேசும்​போது, ‘‘காதல், குடும்​பம், நகைச்​சுவை மற்​றும் வயதை மாற்​றும் விசித்​திர​மான திருப்​புமுனையுடன் உரு​வாகி​யுள்ள தொடர் இது. காதல்​தான் மையம் என்​றாலும் புது​மையாக இருக்​கும். நான் தமி​ழில் பல படங்​களில் நடித்​திருந்​தா​லும் தெலுங்​கில் 200 படங்​களுக்கு மேல் நாயகி​யாக நடித்​திருக்​கிறேன். அதில் பெண்​களுக்கு முக்​கியத்​து​வம் கொண்ட பல கதைகளில் அப்​போதே நடித்​திருக்​கிறேன்.

என் பெயரில் கூட தெலுங்​கில் படம் வெளியாகி இருக்​கிறது. எப்​போது நடித்​தா​லும் எந்த கதாபாத்​திரம் கிடைத்​தா​லும் முதல் படத்​தில் நடிப்​பது போலதான் இருக்​கும். அந்த கேரக்​டர், இயக்​குநருக்கு எப்​படி வேண்​டுமோ, அவர் என்ன எதிர்​பார்க்​கிறாரோ அதைக் கொடுப்​ப​து​தான் எங்​கள் வேலை.

இத்தனை வருடம் நான் நடித்​துக்​கொண்​டிருக்​கிறேன் என்​றால், இயக்​குநரின் நடிகை​யாக இருப்​ப​தால்​தான். ஒவ்​வொரு படத்திலும் வெவ்​வேறு வித​மாக நடித்​திருக்​கிறேன். இந்த வெப் தொடரில் இயக்​குநர் எப்​படி வேண்​டும் என்று எதிர்​பார்த்​தாரோ அப்​படி நடித்​திருக்கிறேன்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT