உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள படம் ‘லக்கி’. இதில் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளங்கோ குமரவேல், கோவை சரளா, சுப்பு பஞ்சு, மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நகைச்சுவை, அரசியல், ஆக் ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது நடக்கும் சம்பவங்களை பற்றி இந்தப் படம் பேசும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக பிப்.20-ம் தேதி வெளியாகிறது.