ஓடிடி தகவல்

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ நவ.6-ல் ஓடிடி-யில் ரிலீஸ்

ப்ரியா

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஐ அம் கேம்’ படம் நவம்பர் 6-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்தத் தகவலை வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஆட்டம் தொடங்க இருக்கிறது. ‘ஐ அம் கேம்’ படம் நவம்பர் 6-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு,  கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது காணத் தவறாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

துல்​கர் சல்​மானின் 40-வது திரைப்​பட​மான ‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்​கி​இருந்தார். இதில், துல்கருடன் கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்​வ​நாதன் உள்ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்திருக்கின்றனர். 

அதிரடி த்ரில்லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருந்தார். 

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் இப்படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. சூதாட்ட விளையாட்டை பின்னணியாக் கொண்ட படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT