ஓடிடி தகவல்

“காதல் என்​பது முழுமையாக புரிந்துகொள்ள முடி​யாத விஷயம்!” - இயக்​குநர் பாலாஜி மோகன் கருத்து

நிலா

அர்​ஜுன் தாஸ், ஐஸ்​வர்யா லட்​சுமி முதன்​மைப் பாத்​திரங்​களில் நடித்​துள்ள வெப் தொடர் ‘லவ்’. இன்​றைய டிஜிட்​டல் உலகில் காதல், டேட்​டிங், உறவு​கள் மற்​றும் உணர்​வு​கள் எப்​படி மாறியிருக்கின்றன என்​பதை நகைச்​சுவை​யுட​னும் உணர்​வுப் பூர்வ​மாக​வும் பேசும் இத்​தொடரை, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

அக்​.2-ம் தேதி நெட்​பிளிக்​ஸில் வெளி​யாக இருக்​கும் இந்த வெப் தொடருக்கு சவுந்​தர்யா ரஜினி​காந்த், ஷோ-ரன்​ன​ராக​வும் தயாரிப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்​தவ் உள்பட படக்குழுவினர் மற்​றும் திரை​யுல​கைச் சேர்ந்த பிரபலங்​கள் கலந்துகொண்டனர்.

இயக்​குநர் பாலாஜி மோகன் பேசும்​போது, “காதல் என்​பது உலகில் யாராலும் முழு​மை​யாகப் புரிந்​து​கொள்ள முடி​யாத விஷ​யம். அதனால்​தான் நான் மீண்​டும் மீண்​டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வரு​கிறேன்.

ஆண்​கள், பெண்​களைப் பற்​றி​யும், பெண்கள், ஆண்​களைப் பற்​றி​யும் தெரிந்​து​கொள்​வது என்​பது பல தலை​முறை​களாகத் தொடர்ந்து கொண்​டிருக்​கும் ஒரு பயணம். இன்​னும் பல ஆண்​டு​கள் சென்​றாலும் காதலை முழு​மை​யாகப் புரிந்​து​கொள்ள முடி​யாது என்​பது​தான் அதன் சிறப்​பு.

எனக்​கும் காதலைப் பற்றி முழு​மை​யாகத் தெரி​யாது. மற்ற அனை​வரை​யும் போலவே நானும் அதை புரிந்​து​கொள்ள முயற்​சித்​துக் கொண்​டிருக்​கிறேன். அதனால்​தான் காதல் கதைகளைத் தொடர்ந்து திரை​யில் சொல்ல வேண்​டும் என்ற ஆர்​வம் எனக்கு இருக்​கிறது.

அதே நேரத்​தில், திரைப்​படங்​களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்​கை​யிலும் அதே​போன்ற எதிர்​பார்ப்​பு​களை உரு​வாக்​கிக் கொள்​ளக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறேன்.

முடிந்​தவரை என்​னுடைய கதைகளை நிஜ வாழ்க்​கைக்கு நெருக்கமாக​வும், அதே நேரத்​தில் பார்​வை​யாளர்​கள் தங்​களு​டன் தொடர்​புப்​படுத்​திக் கொள்​ள​ முடிகிற வகை​யிலும் உரு​வாக்க முயல்​கிறேன்.

‘லவ்’ தொடரை​யும் அப்படித்தான் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்​றிய சில கனவுகளை​யும், நிஜ வாழ்க்​கைக்கு நெருக்​க​மான உணர்​வு​களை​யும் இணைத்து இந்தக் கதையைச் சொல்ல முயற்​சித்​துள்​ளோம்” என்​றார்.

SCROLL FOR NEXT