ஓடிடி தகவல்

2026-ல் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் ‘துரந்தர்!’ - நெட்பிளிக்ஸ் தகவல்

நிலா

ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன் உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற படம், ‘துரந்​தர்’. ஆதித்யா தார் இயக்​கிய இப்​படத்​தின் அடுத்த பாகம், ‘துரந்​தர்: த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் வெளி​யானது. இந்​தி​யில் உரு​வான இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னட மொழிகளி​லும் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யானது.

இப்​பட​மும் பிரம்​மாண்ட வெற்றி பெற்றது. 2-ம் பாக​மான ‘துரந்​தர்: த ரிவெஞ்ச்’, இந்​தி​யா​வில் மட்​டும் நிகர வசூலாக ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்த முதல் பாலிவுட் படம் என்ற மைல்​கல்லை எட்​டியது. இரண்டு பாகங்​களும் இணைந்து உலகள​வில் ரூ.3,100 கோடிக்​கும் அதி​க​மாக வசூல் செய்​துள்​ளது.

ஓடிடி தளத்​தி​லும் இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில், நெட்​பிளிக்ஸ் வெளி​யிட்ட தரவு​களின்​படி, இந்த ஆண்​டின் ஜனவரி முதல் ஜூன் வரை, ‘துரந்​தர்’ படம் 3.7 கோடி பார்​வை​களைப் பெற்​றுள்​ளது. மேலும், நெட்​பிளிக்​ஸின் ஆங்​கிலம் அல்​லாத திரைப்​படங்​களுக்​கான பட்​டியலில், 22 நாடு​களில் இப்​படம் முதலிடத்​தைப் பிடித்து சாதனைப் படைத்​துள்​ளது. இதை அதன் இணை தலைமை நிர்​வாக அதி​காரி ரெட் சரண்​டோஸ் நிகழ்ச்சி ஒன்​றில் தெரி​வித்​துள்​ளார்.

நெட்​பிளிக்​ஸில், இந்​தி​யத் திரைப்​படங்​கள் மற்​றும் வெப் தொடர்​களுக்​கான சர்​வ​தேச அளவி​லான வரவேற்பு தொடர்ந்து அதி​கரித்து வரு​வ​தாகக் கூறிய அவர், 2024-ம் ஆண்டு முதல், ஒவ்​வொரு வார​மும் உலகளா​விய டாப் 10 பட்​டியலில் குறைந்​த​பட்​சம் ஓர் இந்​தி​யத் திரைப்​படம் அல்​லது தொடர் இடம்​பெற்று வரு​கிறது என்​றும் சொன்​னார். இந்​திய சினிமா தற்​போது சர்​வ​தேச பொழுது​போக்கு சந்​தை​யில் வலு​வான இடத்​தைப் பிடித்​திருப்​ப​தற்கு ‘துரந்​தர்’ வெற்றி முக்​கிய​மான உதா​ரணம்​ என்​றும்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT