ஓடிடி தகவல்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ அக்.2-ல் ஓடிடியில் ரிலீஸ்

ப்ரியா

நிவின் பாலி - மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

ஜியோ ஹாட் ஸ்டார் மலையாளம் தமது சமூக வலை தள பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொழுதுபோக்கு படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ அக்.2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 4-ல் வெளியிடப்பட்டது.

உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் இந்தப் படம், இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

நிவின் பாலி - மமிதா பைஜு முதன்மை பாத்​திரங்​களில் நடித்துள்ள மலை​யாளத் திரைப்​படமான ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’ படத்தில் சங்​கீத் பிர​தாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன், ஷ்யாம் மோகன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

விஷ்ணு விஜய் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு அஜ்மல் சாபு ஒளிப்​ப​திவு செய்​து உள்​ளார். கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்​படத்தை திலீஷ் போத்​தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்​துள்​ளனர். 

SCROLL FOR NEXT