ஓடிடி தகவல்

நவ.28-ல் ஓடிடியில் வெளியாகிறது விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’

ஸ்டார்க்கர்

விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ திரைப்படம் நவம்பர் 28-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

தற்போது நவம்பர் 28-ம் தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால் ஓடிடியில் நல்ல வரவேற்பினை பெறும் என்று படக்குழுவினர் எதிர்நோக்கி இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கருணாகரன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

SCROLL FOR NEXT