ஓடிடி தகவல்

மே 12-ல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் ‘ஏஐஆர்’ 

செய்திப்பிரிவு

ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக உருவாகியுள்ள ‘ஏஐஆர்’ (Air) ஹாலிவுட் திரைப்படம் மே 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் அஃப்லெக் இயக்கத்தில் மேட் டாமான், ஜேசன் பேட்மேன், கிறிஸ் மெசினா,கிறிஸ் டக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஏஐஆர்’ (AIR). கடத ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவான இப்படத்தை அமேசான் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டது.

உலகம் முழுவதும் 79 மில்லியன் வசூலை குவித்த இப்படம் வரும் மே 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தைப்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT