ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்த ‘துறமுகம்’(Thuramukham) திரைப்படம் ஓடிடியில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள படமான இது கடந்த மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நிவின்பாலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அர்ஜூன் அசோகன், தர்ஷனா ராஜேந்திரன், இந்திரஜித் சுகுமாறன், ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன், பூர்ணிமா இந்திரஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 28-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவின் பாலி கடைசியாக ‘படவேட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் விரைவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.