ஓடிடி தகவல்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸ்

செய்திப்பிரிவு

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்தாக ‘லேபிள்’ (Label) என்ற இணையத் தொடர் ஒன்றை இயக்குகிறார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு மே மாதம் வெளியான படம் ‘நெஞ்சுக்கு நீதி’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படம் இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இணையத் தொடர் ஒன்றை இயக்குகிறார். ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பணியாற்றியுள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் டைட்டில் லுக் போஸ்டரில் 'லேபிள்' என்ற வார்த்தையுடன் சிவப்பு முத்திரை இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT